கறுப்புப் பணம்: 50 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஏன் மீட்கவில்லை? வெங்கையா

venggaiyaaபோபால்:கறுப்புப் பணத்தை மீட்பது எளிமையானது என்றால், பிறகு ஏன் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீட்கவில்லை என்றும் கருப்புப் பண விவகாரத்தில் பிரச்னை எழுப்புகிறவர்கள்தான், உண்மையில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்கள் என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா குற்றம்சாட்டினார்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நேற்று நடந்த பா.ஜ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு இவ்வாறு பேசினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது. பதவியேற்று 5 மாதங்களிலேயே கருப்பு பண நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை காங்கிரஸ் ஏன் வெளியிடவில்லை என்றும் இந்த விவகாரத்தில் வெளிநாட்டு வங்கிகளுடன் முந்தைய அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால், அவகாசம் தேவைப்படுகிறது.

உறவில் பாதிப்பு:

கறுப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலை அவசரப்பட்டு மத்திய அரசு வெளியிட்டால், இந்த விவகாரத்தில் வெளிநாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றார் வெங்கையா நாயுடு.

TAGS: