இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டமுறைப்படி 1976ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை நிறைவேற்றம் மேற்கொள்ளப்படுவதில்லை. எனினும் இந்திய மீனவர்களின் நிலை தொடர்பில் இந்தியா ஏற்கனவே சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, இந்திய அதிகாரிகள் ஏற்கனவே இலங்கையின் ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி காத்மண்டுவில் சார்க் மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது மீனவர் மரணதண்டனை தொடர்பில் இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார் என்று இந்திய அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை மற்றும் ஒருநாட்டின் சட்டத்துறை தொடர்பில் இந்தியாவுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் என்று இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2010ஆம்; ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கைதிகளை பரிமாற்றதின் அடிப்படையில் இலங்கையில் சிறைப்பட்டுள்ள இந்திய கைதிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்து அங்கு சிறைப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.
இலங்கையில் இந்திய தமிழனை தூக்கில் போடுகிறான்.சிங்களவன்.ஆனால் இந்தியாவோ தன் சொந்த நாட்டு மக்களையே தூக்கில் போட துடிக்கிறான் வடவன்.
எப்ப பெசபோராங்கலாம் ??? அந்த ஐந்து போரையும் தூக்கில் போட்ட பிறகா ???அட போடா மோடி கம்னாட்டி
மோடி மட்டும் இல்லை, எந்த வடநாடுகரன் தமிழனுக்கு பரிந்து பேசியுருகான்,