தமிழக மீனவர்களுக்காக வாதாட மஹிந்தவின் ஆலோசகர்: தமிழிசை

thamilisaiஐந்து தமிழக மீனவர்களின் அப்பீல் மனுவுக்காக ஆஜராக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

 ராஜபக்சவின் சட்ட ஆலோசகரான அனில் சில்வா என்பவரே வக்கீலாக ஆஜராகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் தண்டனையை எதிர்த்து வாதாடுவதற்காக இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகராக உள்ள வழக்கறிஞர் அனில் சில்வாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து இலங்கை வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பின் நகல் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நகல் கிடைத்தவுடன், நாளையே இலங்கை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். எனவே, தற்போது தமிழகத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: