தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்: தாலி வாங்கி கொடுத்த அமைச்சர்

womenbuild_toilet_001மகாராஷ்டிராவில் தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்ணை அம்மாநில அரசு கவுரவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், வாஷிம் மாவட்டத்தில் உள்ள சைகேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண், தனது தாலியை விற்று கழிப்பறையை கட்டியுள்ளார்.

இதனால், மகாராஷ்டிர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே கவுரவித்துள்ளார், மேலும் அப்பெண்ணுக்கு புதிய தாலியை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நகை உள்ளிட்ட ஆபரணங்களை விட கழிப்பறை அத்தியாவசியமானது, நான் எனது ஆபரணங்கள் அனைத்தையும் விற்று, கழிப்பறையைக் கட்டினேன் கூறியுள்ளார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், நாட்டில் பல இடங்களில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லை, இதனால் பெண்களுக்கே அதிக பிரச்சினை ஏற்படுகிறது. நான் எனது அமைச்சர் பதவி காலத்தின் முதல் கட்டத்தில் கழிப்பறைக் கட்டுவதற்கு 25% நிதி ஒதுக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

TAGS: