ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஐடியா தருகிறார் மோடி

narendra_modiஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழ்வதற்கு ஆயுர்வேதமே சிறந்தது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 8வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுர்வேதம், ஒரு வாழ்க்கை முறை. ஆயுர்வேதத்துக்கான பெரிய சவாலே, அதற்கு தன்னை அர்ப்பணித்தவர்களிடம் இருந்தே வருகிறது.

அவர்களே ஆயுர்வேதத்தை முழுமையாக நம்புவது இல்லை. ஆயுர்வேதமும், ஆங்கில மருத்துவமும் ஒன்றுக்கொன்று போட்டியான மருத்துவ முறைகள் அல்ல.

ஆங்கில மருத்துவம், ஒரு குறிப்பிட்ட நோயை குணம் ஆக்கலாம். ஆனால், ஒருவர் தொடர்ந்து ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழ்வதற்கு ஆயுர்வேதமே சிறந்தது.

ஆயுர்வேதம், எளிய, சிறந்த முறையில் மக்களை சென்றடைய வேண்டும். சர்வதேச மருத்துவ பத்திரிகைகளில் ஆயுர்வேதம் குறித்து கட்டுரைகள் வெளிவர வேண்டும்.

ஆயுர்வேதம் குறித்து மாபெரும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அதை மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியாது.

ஆயுர்வேத மருத்துவர்கள் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான், நோயாளிகளிடம் அவர்கள் நம்பிக்கையை உண்டாக்க முடியும்.

ஆயுர்வேத மருத்துவர்கள், தங்களை ஆயுர்வேதத்துக்கு அர்ப்பணித்து கொள்ள வேண்டும். அதை ஒரு தொழிலாக பார்க்காமல், மனித இனத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருத வேண்டும்.

மன அழுத்தமின்றி வாழ விரும்பும் மக்களிடையே ‘யோகா’ உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

அதுபோல், ஆயுர்வேதமும் சரியான உணர்வுடன், வாழ்க்கை முறையாக அளிக்கப்பட்டால், அதே போன்ற அங்கீகாரத்தை பெறும் என்று கூறியுள்ளார்.

TAGS: