ராமர்பாலம் சேதமின்றி சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
பழனிக்கு கட்சி பிரமுகர் இல்ல திருமணத்துக்கு வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கணேசன் பழனி மலைக்கோயிலுக்கு வந்துவிட்டு பின்னர் தண்டபாணி நிலையத்தில் அளித்த பேட்டியில், ’’தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பை இந்து அமைப்புகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக கோயில்களில் கோயிலுக்கு வரும் வருவாயில் 15 சதவீதம் மட்டுமே பக்தர்கள், கோயிலில் பணிபுரிவோருக்கு வழங்கப்படுகிறது.
அதிக சதவீதம் அதிகாரிகளுக்கு சம்பளமாகவும், அவர்களுக்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளுக்குமே வழங்கப்படுகிறது.
இலங்கையில் சிங்களவர்கள் வந்தேறிகள்தாம். தமிழர்களே பூர்வீக குடிகள் ஆவர். தெற்கே காட்டுக்குள் வந்து புத்தரை வைத்து வழிபட்டு பின் ஆட்சியை பிடித்தவர்கள் சிங்களவர்கள். ஜாதிகள் கணக்கெடுப்பு அவசியமற்றது. மக்கள் பணியாற்ற சாதிக்கு அவசியம் இல்லை.
திருமணத்தின் போதுதான் ஜாதிகள் அவசியமாகிறது. தமிழகத்தை அடையாளம் காட்ட பாரதி, வள்ளுவர் போல தமிழனின் வீரத்தை அறிய ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோரின் ஆட்சி எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வாஸ்கோடகாமாவுக்கு முன்பே இந்தியா நீர்வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியதை வாஸ்கோடகாமாவே தனது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற வரலாற்றுத்தடங்களை மாணவர்களுக்கு வரலாற்றில் தெரியப்படுத்தும் போது நமது வீரம் விளங்கும். பாரதத்தை தாண்டி தமிழனின் ஆட்சியை நிலைநிறுத்தி தமிழை பரப்பியவர் ராஜேந்திரசோழன். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாடலிலேயே அவரது வீரத்தை பல காலமாக கூறி வருகிறோம்.அவருக்காக மேற்கொண்ட ஊர்வலத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது.
தேசபக்திக்கும், தேசவிரோதத்துக்கும் இனம்காண முடியாத அரசாக தமிழக அரசு விளங்குகிறது. 1962ல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது ஆர்எஸ்எஸ் இயக்கம். இப்பிரச்னையை நீதிமன்றம் வரை கொண்டு செல்வோம். சேதுசமுத்திர திட்டத்தை கொள்கை ரீதியாக அமல்படுத்துவோம். ராமர்பாலம் சேதமின்றி இதை செயல்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், பாம்பன் பாலத்தையும், ரயில்பாலத்தையும் நவீனப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்நிலையில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி 1954ல் தனுஷ்கோடி அழிந்த நிலையில் இதுவரை நெடுஞ்சாலை அமைப்பதாக உறுதியளித்துள்ளார். தற்போது பணிகளும் நடைபெற்று வருகிறது. வாசன் சிறந்த மனிதர், ஆனாலும் அவர்பின் இளைஞர்கள் உள்ளனர் என்றால் இருக்கும் கூட்டம்தானே இருக்கும்.
தற்போது பாரதீய ஜனதா கட்சியுடன் உள்ள கூட்டணி தொடரவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். தமிழகத்தில் ராமர்பாதுகையை வைத்து பரதர் ஆட்சி செய்தது போல ஜெயலலிதா படத்தை வைத்து பன்னீர்செல்வம் ஆட்சி நடத்துகிறார். படத்தை அகற்றுவதோ, இருப்பதோ ஒரு பிரச்னை இல்லை. நிறைவோ, குறைவோ ஆட்சியில் நடக்கும் அனைத்தும் அதிமுகவைத்தான் சேரும்.
தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமான இந்து தலைவர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். -http://www.nakkheeran.in
காங்கிரஸ் ஆட்சியில் சேது சமுத்திர திட்டதை நிறைவேற்ற முயற்சி எடுக்கையில், அதற்க்கு எதிராக கிளம்பியது நீங்கதானே, இப்ப மட்டும் அதற்க்கு முக்கியத்துவம் எதற்கு என்ன அவசரம். தமிழன் பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம்.
ராமர் பாலம் சேதம் இல்லாமல் காப்பாற்றி ராஜபக்சே வீட்டில் போய் குண்டு போடவா போகின்றீர்கள்?. போங்கையா உங்க பாலமும் தாளமும்!. 2000-ம் வருடம் கழித்தும் இந்த இந்திய கேனையன்கள் இப்படித்தான் சிந்திப்பாங்க என்று வெள்ளைக்கார பாதிரிமார்கள் எழுதிய வைத்த குறிப்பு ஏதாவது வெத்திகன் காப்பகத்தில் இருக்கான்னு தேடிட்டு வந்து நம்ப செம்பருத்தி நண்பர்கள் சொன்னால் இவர்களுக்கு பதில் சொல்ல வசதியாக இருக்கும்!.
வாய் சொல்லில் வீரனடி