காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய அணைகள் கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதால், வளர்ர்ச்சி காலங்களில் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக மாநில நிர்வளத்துறை அமைச்சர் பட்டேல், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். மாண்டியா மாவட்டம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மேக்கத்தாத் என்ற இடத்தில் 48டிஎம்சி கொண்ட இரண்டு புதிய அணைகள் கட்டபோவதாக அப்போது அவர் கூறினார்.
பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகம் இது குறித்து கேள்வி எழுப்பும் சூழ்நிலை இல்லை என்றும் கர்நாடக சட்ட ஆலோசகர் பாலி நாரிமன் ஆலோசனையின் பேரில் அணைகள் கட்டபோவதாக பட்டேல் கூறினார். அணைகள் கட்ட மத்திய நிர்பாசன ஆணையம், மத்திய வனம் மற்றும் சுற்று சூழல் அமைச்சகத்தில் அனுமதி பெறப்படும் என்றும் பட்டேல் தெரிவித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 192-டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவிரி நடுவர் மன்ற ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இறுதி தீர்ப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்தும் ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்தும் நதி நீர் பங்கீட்டு முறையை எதிர்த்தும் கர்நாடக அரசு தாக்கல் செய்த 3 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் குறுக்கே இரண்டு புதிய அணைகள் கட்டப்படும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இரண்டு அணைகள் கட்டப்பட்டால் வளர்ச்சி காலங்களில் தமிழகத்தில் மிகப் பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஐயா ஜாலி, அரசியல் வாதிகளுக்கு பேச ஒரு சப்ஜெஜ்க் கிடைத்தது.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
தனி தமிழ் நாடா? தமிழ் நாட்டு தமிழனக்கு அதன் மகத்துவம் புரியாது.இந்தியாவிடம் கையேந்துவது ,பிச்சை கேட்பது, பெருமையாக நினைக்கிறான்.
(இந்தியாவிடம் கையேந்துவது ,பிச்சை கேட்பது, பெருமையாக நினைக்கிறான்.)
இந்தியாவிடம் கையேந்தவில்லை! வடுகர்களிடம் கொள்ளைகாரர்களிடம்,குடுகுடுப்பைகாரர்களிடம் .இப்படி வந்தவர்களிடம் கையேந்தி பழக்கபட்டவர்கள் ..