சீன ஊடுருவல் தீவிரமான பிரச்னை அல்ல: பாரிக்கர்

அருணாசலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவுவது தீவிரமான பிரச்னை அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அவர் முதன் முறையாக தன் சொந்த மாநிலமான கோவாவுக்கு வந்தார். தலைநகர் பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சீன ஊடுருவல் என்பது ஒரு தீவிரமான பிரச்னை அல்ல. அது ஊடகங்களுக்குதான் தீவிரமான பிரச்னை. சீனாவின் ஊடுருவல்கள் என்பவை சிறிய விஷயமாகும். அதை ராணுவத் தளபதி அல்லது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நமது ராணுவ கமாண்டர் திறம்பட சமாளிக்கின்றனர். கற்பனையான எல்லைக்கோட்டையொட்டி ஏராளமான நிலப்பரப்புகள் உள்ளன. அவற்றை படைவீரர்கள் அடிக்கடி கடந்து விடுகின்றனர். நமது நிலப்பரப்புக்குள் சீனத் தரப்பு முகாம்களை அமைத்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

படைவீரர்கள் எல்லை மீறி வரும் அனைத்து சம்பவங்களையும் பெரிய அளவிலான ஊடுருவல் என்று அழைப்பது சரியல்ல. அவை எல்லை மீறல்கள் மட்டுமே என்றார் பாரிக்கர்.

TAGS: