சத்தீஸ்கரில் கருத்தடை செய்துக்கொண்டதால் 13 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், தரமற்ற மருந்துகளை சப்ளை செய்ததாக தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில அரசின் சார்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட 13 பெண்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த கருத்தடை முகாமில் பயன்படுத்தப்பட்ட சில மருந்துகளை தயாரித்த நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ராயப்பூரில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை செய்த அதிகாரிகள், அங்கு சமீபத்தில் ஏராளமான மருந்துகள் எரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு இருந்த சில மருந்துகள் தரமற்றதாக இருந்ததையும் கண்டுபிடித்தனர். அந்த நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் மற்றும் அவரது மகன் சுமித் ஆகியோரை கைது செய்தனர்.