கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது.
ஐந்து மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இந்திய ஊடகங்களிடம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து இந்திய ஊடகங்கள் நேற்று பரபரப்பாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால், சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக வெளியான இந்தச் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு தெரிவுகள் குறித்து சிறிலங்கா அதிபர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தல், எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை இந்தியாவில் கழித்தல், அதன் மூலம் அதிபரின் பொதுமன்னிப்பை பெறும் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐந்து மீனவர்களுக்கும், முழுமையான பொதுமன்னிப்பு அளிக்க இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு இவன் அகரதிஎலே கிடையாது.