அமராவதிக்கு வரும் தண்ணீரைத் தடுத்து புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (15.11.2014 ) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை அமராவதி அணை பாசனப் பகுதிகளான அமராவதி நகர் தொடங்கி, சின்ன தாராபுரம் வரை மக்கள் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
பயணத்தின்போது, விவசாயப் பெருகுடிமக்கள் தலைவர் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மாணவச் செல்வங்களும் பாலச்சந்திரன் முகமுடி அணிந்து வைகோவை வரவேற்றனர்.
பயணத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈரோடு மாவட்டச் செயலாளருமான அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், கொள்கைவிளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் வே.ஈசுவரன் உள்ளிட்ட கழகத்தின் முன்னணியினரும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
நீ என்ன குட்டிகரணம் போட்டாலும் மக்களிடம் உன் பருப்பு வேகாது