இந்திய மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தத்தெடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.யும், ஒவ்வொரு கிராமத்தை தத்து எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஜெயாப்பூர் கிராமத்தை தத்து எடுத்தார். அங்கு எம்.பி. தொகுதி நிதியின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் ஒவ்வொரு கிராமத்தையும் தத்து எடுத்து வருகிறார்கள்.
மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள பாந்தா என்ற கிராமத்தை தத்து எடுத்து உள்ளார். இந்த கிராமம் போபாலில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி நஜ்மா ஹெப்துல்லா பாந்தா கிராமத்துக்கு செல்கிறார். அங்கு அவர் தத்து எடுக்கும் திட்டத்தை முறைப்படி அறிவித்து தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2016–ம் ஆண்டுக்குள் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள குக்கிராமத்தை தத்தெடுத்தார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள பெட்டி என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தனது தொகுதியான ரேபரேலியில் உள்ள உத்வா என்ற குக்கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
தத்து எடுபபதுஒடு நில்லுங்கள், பட்டா போடாமல் இருந்தால் ok.