கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்

உலகில் இன்றளவும் சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகளைக் கொண்டுள்ள நாடு என க்ளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் அமைப்பு கூறுகிறது.

india_labour_bonded
வேலையிடத்தில் சுரண்டப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில் இந்தியாதான் மிகவும் மோசம்

 

அந்நாட்டில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கைச் சூழலைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இதில் இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

ஜனத்தொகை சதவீத அடிப்படையில் மிக அதிகமானவர்களை அடிமையாகக் கொண்டுள்ள நாடு மௌரிடானியா. அந்நாட்டின் ஜனத்தொகையில் 4 சதவீதமானோர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர்.

கொத்தடிமைத் தொழில் முறை, பலவந்த திருமணம், வர்த்தக ரீதியான பாலியல் சுரண்டல்கள், கடன் சுமையில் வாடுவோரை சட்டவிரோத கொண்டு சென்று வேலை வாங்குவது போன்ற அம்சங்களைப் பார்த்து அடிமடைத்தளையில் வாழ்பவர்கள் வரையறுக்கப்படுகின்றனர்.

அடிமைத்தனத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், ஆட்களை பலவந்தமாக கொண்டு சென்று வேலை வாங்குவோர்க்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. -BBC

TAGS: