உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியல்: மோடிக்கு முதலிடம்

உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்காவின் முன்னணி வெளிநாட்டுக் கொள்கை பத்திரிகை வெளியிட்டுள்ள “100 உலக சிந்தனையாளர்கள்’ பட்டியலில், “சிறந்த முடிவெடுப்போர்’ பிரிவில்,

உலக அளவில் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும். 3-ஆவது இடத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் உள்ளனர்.

மோடி குறித்து அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: “மோடி வசீகரமானவர், வர்த்தகத்துக்கு சாதகமான தலைவர். அவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள்கின்றனர். அவரது பேச்சு, 3டி தொழில்நுட்பம் மூலம் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது’ எனத் ரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அந்த பத்திரிகையில், “உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய பிரசார இயந்திரத்தை கட்டமைத்தவர். தேர்தல்களில் பாஜகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, சிஜிநெட் ஸ்வாரா நிறுவனர் சுப்ரான்சு சௌதரி, செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ், இந்திய தேசிய போலியோ ப்ளஸ் கமிட்டி தலைவர் தீபக் கபூர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரும், மருத்துவருமான சங்கீதா பாட்யா, விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், பொருளாதார நிபுணர் பார்தா தாஸ்குப்தா ஆகியோரும் உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். -http://www.dinamani.com

இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்ற வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களும் உதவிட வேண்டும்

modiaustraliaசிட்னி: இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என்ற 125 கோடி மக்களின் எண்ணங்கள், கனவுகளை நினைவாக்குவதற்கு  வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களும் உதவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 மாநாட்டுக்குப் பிறகு தனது மூன்று நாள் அரசு முறை பயணத்தை மோடி நேற்று தொடங்கினார். சிட்னியில் நடந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மிக பிரமாண்டமான இந்திய வம்சாவளியினர் சந்திப்பில் அவர் பங்கேற்றார். அல்போன்ஸ் அரேனாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: கடந்த ஆட்சிகளில் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தனர். நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அந்த சட்டங்களை நீக்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஜன்னலைத் திறந்தால்தான் காற்று உள்ளே வரும். அதுபோல் தடைகளை நீக்கினால்தான் நாட்டுக்குள் முன்னேற்றம் வரும் என்பதை உணர்ந்துள்ளோம். சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றபோது, `இந்திய வம்சாவளி‘, `வெளிநாட்டு வாழ் இந்தியர்‘ என்று இரண்டு நிலைகளாக உள்ளதை ஒருங்கிணைப்போம் என்று கூறினேன். ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தபின் விசா பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்படும். அகமதாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு முன்பாக இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்.

நீங்கள் எதிர்பார்க்கும் இந்தியாவை உருவாக்க தயாராக உள்ளோம். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் மிகப் பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கடந்த 6 மாத அரசு நிர்வாக அனுபவத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் உதவிட வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காக நாம் போராடவில்லை. ரத்தம் சிந்தவில்லை. அதே நேரத்தில் இந்தியாவுக்காக நாம் வாழ்வோம். நாட்டில் உள்ள அனைத்து மக்களின் எண்ணமும் இதுவே. சில மணி நேரத்தில் பயணம் செய்யக் கூடிய ஆஸ்திரேலியாவுக்கு 28 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர் வரவில்லை. நீங்கள் அடுத்த 28 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவுக்கு பலன் அளிக்கக் கூடியதை செய்வோம். அதன்பிறகு உலக மக்களின் நலனுக்காக இந்தியா பாடுபடும் என்றார்.

தூய்மை இந்தியா திட்டம் : உதவ கோரிக்கை

அரசு நிர்வாகம் ஒரு நாட்டை உருவாக்காது. மக்களால்தான் ஒரு நாடு உருவாகிறது. மக்கள் இயக்கமாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருந்தாலே, முன்னேற்றத்தின் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும். ஏழைகளுக்கு இதைவிட மிகச் சிறந்த சேவையை செய்ய முடியாது. ஜன்தன் திட்டம் மூலம் கடந்த 10 வாரங்களில் 7 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 5 ஆயிரம் கோடி அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.நாட்டில் குடிநீர், மின்சாரம், தூய்மை போன்ற வசதிகளை மேம்படுத்த அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் உதவிட வேண்டும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவிய தாய்நாட்டுக்கு பிரதிபலனாக இதை செய்ய வேண்டும். ஒரு ஆராய்ச்சியாளர் தானே காரை ஓட்டுச் செல்வதை இங்கு பார்த்தேன். எந்த பணியாக இருந்தாலும் அதில் கவுரவம் பார்க்கக் கூடாது. தூய்மைப் பணியும் அதுபோல்தான். இவ்வாறு மோடி பேசினார். சிட்னி கலாசார மையத்தை இந்தியா அமைக்கும். 2015 பிப்ரவரியில் இருந்து அது செயல்படும் என்றும் மோடி அறிவித்தார்.

TAGS: