ரூ.12 கோடி போலி கரன்சி நோட்டுகள் பறிமுதல்

fakeபுதுடில்லி: பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வர முயன்ற இந்திய போலி ரூபாயின் மதிப்பு ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலி இந்திய ரூபாய்களை பெரும்பாலும் நேபாளம், வங்கதேசம், இலங்கை தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் மூலம் கடத்தி வரப்படும் இந்திய போலி ரூபாய் நோட்டுகள் அனைத்தும் டாக்கா, கொழும்பு விமானநிலையம் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 12 கோடி ரூபாய் வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் வரையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி கரன்சி நோட்டுகள் குறித்து சுமார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிக பட்சமாக பாகிஸ்தானியர்கள் மீது 6 வழக்குகளும், வங்கதேசம், நேபாள நாட்டினர் மீது தலா 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் அதிகபட்சமாக டாக்கா விமான நிலையத்தின் மூலம் ஒரே எண்களை கொண்ட விரிசையாக சுமார் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதி்ப்பு கொண்ட போலி கரன்சி நோட்டுகள் ஆறு மூடைகளாக இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் வங்க தேசத்தை சேர்நதவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு விமான நிலையத்தில் ரூ. 15 லட்சம் இந்திய போலி ரூபாய் வைத்திருந்ததாக பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேபாள நாட்டின் தொழில் அதிபர் மற்றும் அரசியல் பிரமுகரிடம் இருந்து சுமார் 45 லட்சம் போலி கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த அபுதாபியில் 47.27 லட்சம் ரூபாய் போலி இந்திய கரன்சி நோட்டுகள் வைத்திருந்ததாக 4 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். -http://www.dinamalar.com

TAGS: