பா.ம.க தலைமையில் கூட்டணி: 8 கட்சிகளுக்கு அழைப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக கூட்டணிக்கு வருமாறு மதிமுக, ஜி.கே.வாசனின் புதிய கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். பாமகவின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தார்.  நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணிக்கு வருமாறு மதிமுக, ஜி.கே.வாசனின் புதிய கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார்.

மேலும் அவர் கூறும் போது  பாமக தலைமையிலான மாற்று அணியின் முழக்கமாக பூரண மதுவிலக்கு இருக்கும். இதையே தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல உள்ளோம். 2016-இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பாமகவால்தான் முடியும்.இந்த நேரத்தில் குறிப்பாக காங்கிரஸில் இருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன் கட்சி, மதிமுக, புதிய தமிழகம்,  காந்திய மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய 8 கட்சிகள் பாமகவை ஆதரிக்க முன் வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். எனினும் பா.ம.க முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த அறிவிப்பையும் ராமதாஸ் வெளியிடவில்லை. -http://www.dinamani.com

TAGS: