அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் தினமும் பாலில் குளிப்பதாக தெரியவந்துள்ளது.
அரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கி இருந்தார்.
ஆசிரமத்தையும், தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.
இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகததால் பொலிசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது ஆசிரமும் சோதனையிடப்பட்டது, சோதனையில் ஆசிரமத்தில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 3 ரிவால்வர்கள், 19 ஏர்கன் துப்பாக்கிகள் 2 டபுள் பேரல் துப்பாக்கிகள் 2 ரைபிள்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் ஆயுதங்களும் சிக்கின.
இது தவிர மிளகாய் தூள் நிரப்பிய குண்டுகள், அமிலம் நிரப்பபட்ட சிரஞ்சிகள், ஹெல்மட்டுகள், சைத்தடிகள், 20 ஜோடி கறுப்பு உடைகள், 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டீசல் டேங்க், ஆகியவையும் இருந்தது.
மேலும் ராம்பாலின் படுக்கை அறையையொட்டியுள்ள அறையில் சோதனை யிட்ட போது கர்ப்ப சோதனை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு மிளகாய் பொடி, மாத்திரைகள், குஷன் மெத்தைகள், ராட்சத மெத்தைகள் போன்றவைகளும் இருந்தன.
மூடப்பட்டிருந்த ஒரு குளியல் அறையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாமியார் ராம்பால் பக்தர்களால் தினமும் பாலில் குளிக்கவைக்கபட்டு உள்ளார். அது ஆசிரமத்தில் கீர் செய்ய பயன்படுத்தபட்டு பக்தர்களுக்கு வழங்கபட்டு உள்ளது. -http://www.newindianews.com
குளு குளு அறை, நீச்சல் குளம்: கொலைகார சாமியாரின் வாழ்க்கை
கைதான சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் 24 குளு குளு அறைகளும், நீச்சல் குளம் மற்றும் ஏராளமான துப்பாக்கிகள் இருந்ததை பார்த்து பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, சாமியாரை கைது செய்ய சென்ற பொலிசார், ஆசிரமத்தின் ஆடம்பரத்தை சோதனையிட்டுள்ளனர்.
சண்டிகார்–ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 12 ஏக்கர் பரப்பளவில் அவரது ‘சத்லோக்’ ஆசிரமம் அமைந்துள்ளது.
அதன் நுழைவாயிலில் பக்தர்களை பரிசோதிக்க ‘மெட்டல் டிடெக்டர்’ வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.
அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மிக போதனைகளை நிகழ்த்துவார்.
பிரார்த்தனை அரங்கத்தை சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சாமியாரின் போதனைகளை திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.
ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ‘மசாஜ்’ படுக்கை உள்ளது.
மற்றொரு அறையில் ‘ட்ரெட்மில்’ வசதி உள்ளது. 4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரமத்தில் ஏராளமான துப்பாக்கிகள் இருந்தன. ஒரு ரகசிய அறையில் இருந்த இரண்டு பீரோக்களில் கைத்துப்பாக்கி, குழல் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர்.ரக துப்பாக்கி என விதவிதமான துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.
இந்த அறை, சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது.
ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம்.
இதுதவிர, நவீன மருத்துவமனையும் உள்ளது. 10–க்கும் மேற்பட்ட பேருந்து மற்றும் வாகனங்களும் உள்ளன. –http://www.newindianews.com
10.000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.