மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை : வைகோ பேச்சு

vaikoபடிக்கும் காலத்தில், மாணவர்களுக்கு, அரசியலும் சாதியும் தேவையில்லை,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

 

பூரண மதுவிலக்கு கோரி, ம.தி.மு.க., சார்பில் கோவை சுந்தராபுரத்தில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை துவக்கி வைத்து, வைகோ பேசியபோது,  ‘’மதுப்பழக்கம், இன்று பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. ஆட்சியிலிருப்போர், மது விற்பனையால் வரும் வருமானத்தையே பார்க்கின்றனர். இளைய தலைமுறையினர், மதுவை ஒழிக்க பாடுபட வேண்டும்.

 

தோல்வியை கண்டு மனம் தளரக்கூடாது. நான் பல தோல்விகளை கண்டபோதும், போராட்டங்களை தொடர்கிறேன். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும். படிக்கும் காலத்தில் அரசியலும், சாதியும் தேவையில்லை. குறிக்கோளை அடைய பாடுபட வேண்டும்’’என்று பேசினார். -http://www.nakkheeran.in

TAGS: