புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை ஈழ அகதிகள் முகாம் உள்ளது. இங்கு சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலின் குடுமுழுக்கு நாளை 27 ந் தேதி வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டு அதற்காக ஒலிபெருக்கி மற்றும் பாதுகாப்பு கேட்டு காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளனர். முதலில் வாய்மொழியாக நடத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
காவல் துறையின் அனுமதியைத் தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை முதல் யாக பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் நாளை வியாழக்கிழமை மாவீரர் தினம் இருப்பதால் திடீரென் நள்ளிரவில் வந்த டி.எஸ்.பி பாலகுரு தலைமையிலான போலிசார் குடமுழுக்கு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் யாக பூஜைகள் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.
நல்ல நாளில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டே அனுமதி கேட்டு நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அதனை ஏற்காத டி.எஸ்.பி பாலகுரு யாக பூஜை நடத்திக் கொண்டிருந்த குருக்கள்களை அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் இன்று காலை 6.40 மணிக்கு திரண்ட முகாம் மக்கள் சாலை மறியல் செய்யத் தொடங்கினார்கள். அப்போது அங்கு இருந்த டி.எஸ்.பி பாலகுரு மற்றும் போலிசார் அவர்களை கைது செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்இ குழந்தைகள்இ கல்லூரி மாணவிகள் மீது தடியடி நடத்தி அவர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முகாம்வாசிகள் கூறும் போது. இன்று தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்இ நாளை மாவீர் தினம் அதனால் குடமுழுக்கு நடத்தக் கூடாதுஇ ஒலிபெருக்கி வைக்க கூடாது என்று தடைவிதித்து தடியடி நடத்தி பெண்களையும் டி.எஸ்.பியே ஈழுத்து சென்று கைது செய்துள்ளார். நாங்கள் குடமுழுக்கு நடத்த கூட தடைவிதிக்க வேண்டுமா.. தமிழக அரசு தலையிட்டு குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.
பிள்ளாயாருக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள். ஒருகால் சிவபூஜை செய்திருந்தா விட்டிருப்பார்களோ?. மாற்றித்தான் செய்து பாருங்களேன். பாலகுருவுக்கு அப்பாவான சிவனை பூஜிப்பதை நிச்சயமாக பாலகுரு தடுக்க மாட்டார். ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப கம்ச்சிங்!.
இருந்த இடத்தில சுதந்திரம் இல்லை, வந்த இடத்தில் குடமுழுக்கு தேவையா? இதனால்தான் அகதிகள் என்றல் எல்லா நாடுகளும் பயபடுகின்றனவோ,
குடமுழுக்கு செய்வது என்ன உலக மகா பாவச் செயலா?அல்லது தீவிரவாதத்தின் ஒரு பகுதியா?
தமிழர் நாட்டிலேயே, தமிழர்களின் ஓர் உதாரண, உன்னத, உத்தமத் தமிழ்த் தலைவனுக்கு உரிய மரியாதையை செய்ய உரிய சுதந்திரம் இல்லை…!! மற்றவற்றில் மிகவும் துணிச்சல் காட்டும் ஜெயா இந்த விசயத்திலும் ஒரு கண்ணை சிறிது மூடிக்கொண்டால் என்ன?! (அவர் இப்ப CM இல்லை என்றாலும், அவர்தான் de facto. முதுகுத் தண்டு இல்லாத முதவர் கண்ணீர் பண்ணீர் சொந்தமாக எந்த முக்கிய முடிவும் எடுப்பார் என்று எல்லோரும் சேர்ந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.) இனி 500 ஆண்டுகள் ஆனாலும் தமிழர்களுக்கு இப்படிப்பட்ட இனமான உணர்வும், அர்பணிப்பும், நேர்மையும், சுயநலமின்மையும், வீரமும், நிர்வாகத் திறைமையும், இன முன்னேற்றத்துக்கான அபார தூரநோக்கு பார்வையும் கொண்ட ஒருவரைக் காண்போமா என்பது சந்தேகமே. தமிழர்களிடேயே அறிவாளிகள் அதிகம் உள்ளனர். ஆனால் நல்லத் தலைமைத்துவத் தகுதி கொண்ட யாரும் தென்படவில்லை.
தமிழ் நாடு தமிழர்கள் உண்மையிலேயே கூறு கெட்ட ஈன துரோகிகள். அதிலும் இந்த காவல் துறை சொல்லவே எரிகிறது.எப்படி ப்பட்ட பயிற்சி கொடுக்கப்பட்டதோ இந்த காவல் மடையர்களுக்கு. அகதிகள் அதுவும் நம் உடன் பிறப்புகள் என்று கூடவா தெரிய வில்லை? ஈன ஜென்மங்கள். ஈழ தமிழர்களுக்கு என் அனுதாபங்கள். இன்னும் நான் என்ன சொல்ல? தெற்கு ஆசியர்கள் என்றுமே தேற மாட்டார்கள்.
தமிழ் நாட்டு தமிழனின் தலையிலும் அங்குள்ள காவல் துறையினரின் தலையிலும் சினிமா படம் ஓடிக்கொண்டிருக்கிறது.அதனால் இன,மொழி,தன்மான உணர்வு எதையும் அதுகளிடம் எதிபார்க்க முடியாது.
தமிழ் நாடு மக்களை என்னவென்று சொல்வதே தெரியவில்லை.வேதனை தான் மிஞ்சுகிறது.
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை தமிழீழ அகதிகள் முகாமை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன். ஒரு முகாம் என்று சொல்லவே முடியாது. ஒரு அழகான கிராமம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டுக் கிராமங்களைவிட நன்கு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் தமிழீழ மக்கள். கடினமான உழைப்பாளிகள். மாலை மனி ஐந்துக்கும் ஆறுக்கும் இடையில் வருமானத்திற்காக வெளியாரிடம் வேலைசெய்துவிட்டு நூற்றுக் கணக்கானோர் சாலையில் வரிசைபிடித்து வீடு திரும்பிய காட்சியைக் கண்டு , தமிழ்நாட்டிலாவது இந்த மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களே என்று நினைத்தேன். இப்படி போலீசார் இரக்கமின்றி அந்த மக்களைத் துவசம் செய்வார்களென நினைத்துக்கூட பார்க்கவில்லை. போலீஸ் துறை அதிமுக வசமுள்ளது. இப்படியெல்லாம் ஈழத்தமிழனை வதைத்தெடுத்தால் மத்தியில் உள்ள மோடி அரசிடம் நல்லப் பெயர் வாங்கலாம் என்ற எண்ணமோ? அம்மா சிறையிலிந்ததை சகித்துக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டையே சூரையாடிய அதிமுக தமிழன் இப்போது அடிபடும் ,உதைபடும் தமிழனுக்காக மௌனம் காப்பதுதான் ஏனோ? அதிமுகாவினர் அம்மாவிற்காக ரௌடித்தனம் புரிந்தபோது, சாலைகள் விரிச்சோடி கிடந்தபோது, வியாபார ஸ்தாபனங்கள் , கடைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டபோது கைகட்டி வாய்மூடி மௌனம்காத்த இந்தக் கேடுகெட்ட தமிழ்நாட்டு போலீஸ் துறை அப்பாவி ஈழத்தமிழனிடம்தானா வீரத்தைக் காட்ட வேண்டும்? நெஞ்சில் ஈரமில்லா ஈனப்பிறவிகளா இவர்கள்? தமிழனே இப்படி இருக்க நாம் சிங்களவனிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது எங்கனம்? இதில் வெட்கப்படவேண்டிய விசயம் என்னவென்றால் இந்த முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் அம்மா சிறையில் வாடுவதைச் சகிக்காமல் அதிமுக காரனோடு சேர்ந்துகொண்டு நீதிபதியின் தீர்ப்பிற்கெதிராக ஆர்ப்பாடமும் எதிர்ப்பும் காட்டியதுதான் வெட்கக்கேட்டிலும் வெட்கக்கேடான காரியமாகும். எடுப்பார் கைபிள்ளைகளாய் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதே என் கோரிக்கையாகும்