விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்த நாள் விழாவை சிறைச் சாலையில் கொண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாளை சிறையில் கொண்டாட அனுமதி கேட்டு, மூவரும் சிறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால், இந்த மனுவை பரிசீலனை செய்த உயர் அதிகாரிகள் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவை கொண்டாட அனுமதி மறுத்துள்ளனர்.
*********************************************************************************************************************************************
திருப்பூரில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, இனிப்புகளை வழங்கி கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபாகரன் பிறந்தநாள் : மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார் சீமான்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன.
26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்கன்றுகளும் நடப்பட்டன.
திருவொற்றியூர் ராஜா கடை கங்கா காவிரி திருமண அரங்கில் இன்று மாலை வரலாற்று ‘‘தலைவனுக்கு வாழ்த்துப்பா’’ என்ற மலர் வெளியீட்டு விழாவும், கூட்டமும் நடைபெறுகிறது. இதில் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ராயப்பேட்டை வி.எம். தெருவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மற்றும் பலர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
– http://www.nakkheeran.in
என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் நேரமா இது?
இன உணர்வை காட்ட நேரம் காலம் எல்லாம் தேவை இல்லை.தேவை துணிவும் தன்மான உணர்வும்தான்.
அம்மா சொன்னதில் முற்றிலும் உண்மை !!!!!!ஈழ தமிழர்களை கேடயமாக பயன்படுத்திக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் தான், ராஜபக்ஷே அல்ல”