இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் மூலம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர்களுக்கு சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்க்கும் பணிகளை ஆரம்பித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அல்லது சீனா உட்பட அண்டை நாடுகளை பகைத்து கொள்ளக் கூடாது என்பதே இந்தியாவின் கொள்கை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலையிட்ட பின்னர், இலங்கை அரசாங்கம், மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. இப்படியான விடயங்கள் தொடரும்.
தவறுதலாகவோ அல்லது வேண்டும் என்றோ இரு நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் சென்ற நிலையில் கைது செய்யப்படும் மீனவர்களை விரைவாக விடுதலை செய்யும் பொறிமுறை உருவாக்கப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை ஏற்படுத்த முடியும் எனவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com