பள்ளிக்கூடத்தில் ஆசிரியை வேலையில் சேர்ந்துள்ளதாக தேவயானி தெரிவித்தார்.
நடிகை தேவயானி ‘தொட்டா சினுங்கி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 1995–ல் இப்படம் வந்தது. ‘காதல் கோட்டை’ படம் இவரை பிரபலபடுத்தியது. சூர்யவம்சம், பிரண்ட்ஸ், மறுமலர்ச்சி, தெனாலி, வல்லரசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
2001–ல் டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். தற்போது அவருக்கு 40 வயதாகிறது. வீட்டில் கணவர், குழந்தைகளை கவனித்து வந்த அவர் திடீரென ஆசிரியை வேலையில் சேர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து தேவயானி கூறியதாவது:– வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. ஆசிரியை வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்ததும் ஆசிரியை வேலையில் சேர முடிவு செய்தேன்.
எனது மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாய் வேலை பார்க்க விரும்பினேன். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து வேலை கேட்டேன். அவரும் சம்மதித்தார். இப்போது அந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நான் பாடம் நடத்தும் வகுப்பில் 45 குழந்தைகள் உள்ளனர். ஆசிரியர் பணி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
இவ்வாறு தேவயானி கூறினார். -http://123tamilcinema.com


























நல்ல வேலை சீரியல் லா போகாமல்…..நல்ல உதாரணத்துவம் நல்ல நடிகை! ஒரு நல்ல ஆசிரியையாக வாழ்க உங்கள் ஆசை ..அப்படியே தமிழை காப்பாத்துங்க?
ஆசிரியப்பணி அறப்பணி. அறவுக்கண் திறக்கும் பணி. முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற இறைவன் அருளட்டும்.
பல நடிகனுடன் கட்டி பிடித்து நடித்துவிட்டு ,இப்ப நல்லாவே போயி பாடம் சொல்லிகொடுங்க ,ஒரு நடிகை பாடம் சொல்லிக்கொடுத்தா மாணவர்கள் உருப்பிட்ட மாதிரிதான் .
நல்ல பணி. வாழ்த்துக்கள்
கருத்துக்குருடன்..! இப்படித்தான் பேசுவான், எழுதுவான்..!
Intha MK oru pirpokkuvaathi.
உலகியல் வாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் பிறிது பார்க்க தேறி யாத முண்டங்கள் நிறைய நாட்டில் இருகங்க .