பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்

இந்தியாவை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகிவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

rajyko
ராஜ்நாத் சிங்குடன் வைகோ

 

இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல விஷயங்களில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் வைகோ கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச் ராஜை, வைகோவை தாக்கிப் பேசியதை மதிமுகவினர் மட்டுமல்லாது மற்ற கட்சித் தலைவர்களும் கண்டித்திருந்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் கூடிய மதிமுக உயர்நிலைக் குழு, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளது.

மதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வைகோ எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படாத காரணத்தால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.

பா ஜ க தலைமையிலான கூட்டணியில் அங்கம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், மத்திய அரசை பல விடயங்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்து வருகிறது. -BBC

TAGS: