லிங்கா பட வழக்கில் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு : 10 கோடி செலுத்தினால்தான் படத்தை வெளியிட அனுமதி

Linga12ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள லிங்கா படத்தின் கதைக்கு உரிமைகோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

நாளை மதியம் 12 மணிக்குள் 5 கோடி ரூபாய் பணம், 5 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  இவற்றை  மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளரிடம் செலுத்த வேண்டும்.  10 கோடி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதி உண்டு என்று பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது மதுரை உயர்நீதிமன்றக்கிளை.

மனுதாரர் 4 வாரத்தில் கீழ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்றும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in