இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் சார்ந்த அமைப்பினர் புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
புதுடில்லியிலுள்ள வாட்டிகன் தூதரகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
தலித் கிறிஸ்தவர்கள் சார்ந்துள்ள தேவாலயங்கள் கூட தங்களைப் புறக்கணிப்பதாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.
உலகளவில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள கத்தோலிக்க மக்களுக்காக குரல் கொடுக்க வாட்டிகன் மறுத்து வருகிறது என அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கான விஜயத்தை போப் பிரான்ஸிஸ் மேற்கொள்வதையும் இந்த செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர். -http://www.bbc.co.uk
எந்த மதம் அனாலும் அடிமை சமுகம் ஒன்று இருந்தால் மீள்குடி சமுக திற்கு மிக மிக நன்மை. இந்த மேல்குடி சமுகம் ஜாதி என்ற அடையாளத்தில் இந்த அடிமைகளை அடக்கி தனது நிலையையும் சுகபோக வாழ்க்கையும் நிலை நிறுத்தி கொள்ளும் .இந்த அடிமைகளின் விடியலுக்கு போரடியவர் தந்தை பெரியார்.அதனால் அவர் அம்பேத்கர் போல் மதம் மாறவில்லை .
பிரிவினை வாதம் கொண்டு மனிதர்களை பிரித்தாள்வது இந்துமதம் மட்டுமே என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறும் பகுத்தறிவு பாசறை நல்லவர்களுக்கு இந்த விஷயம் மட்டும் கண்ணுக்கு புலப்படவில்லையா ??