மதமாற்றத்தைத் தடுப்பதற்காக, மதமாற்றத் தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், லக்னெளவுக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எந்த அமைச்சர் விளக்கம் அளித்தாலும், அது அரசுத் தரப்பு கருத்து என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
முன்னதாக, சில அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மத மாற்ற நிகழ்ச்சிகள் குறித்து, நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.
-http://www.dinamani.com
வந்துடுச்சி ஹிந்துத்துவா!.
நல்ல வேலை கொண்டுவதர்கள் இல்லேன இந்தியாவ பகிச்டனாகவே மாதிடுவானுங்கே
பிறக்கும்போது இந்துவா பிறந்து பிறமதத்துக்கு மாறினாலும் இந்து இந்துதான்,
மனிதன் நாய் வேஷம் போட்டாலும் மனிதன் மனிதன்தான்,
நாய் நாய்தான்.
சே!.சே! இப்படியெல்லாம் விரசமாக பேசக் கூடாது. அப்புறம் யானை, யானைத்தான் என்று யாராவது எழுதி விடப் போகின்றார்கள்!.
ஒரு ரூபா சம்பளத்தில் சொத்து சேர்த்த தாயுள்ளம் படைத்த ஜெயா,மத மாற்று தடைச் சட்டத்தை அமுல்படுத்தி நடப்புக்கு வந்ததும், கடுமையான எதிர்ப்பு பூதம் தோன்றியதும் வந்த வேகத்தில் இன்றுவரை பெட்டிக்குல் உறங்குது.என் நினைவாற்றல் சரியாக இருக்குமென்று நம்புகிறேன் !
கும்கியின் கருத்து அறிவிபூர்வமானது.(நாய் உதாரணம் சரியில்லை என்றாலும்) .மதம் மாற்றும் மூடத்தனம் அறவே நசுக்க பட வேண்டும்..கண்டவளை -திடீரென்று வந்தவளை அம்மா என அழைப்பதா ? அப்போ -நம்மை பெற்று வளர்த்தவர் யார் ????கட்டாய மத மாற்ற சட்டம் அங்கு மட்டும் அல்ல >>இங்கும் மிக அவசியம் …