இந்தியத் தலைநகர் டில்லியின் சுரங்க ரயில்வே கட்டமைப்பில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பிடிபட்ட பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என காவல்துறை கூறியுள்ளது.
டில்லியின் சுரங்க ரயில்வே கட்டமைப்பைக் கண்காணிக்கின்ற பாதுகாப்புப் பிரிவினர் சேகரித்த தகவல்களின்படி, இந்தக் காலப்பகுதியில் பிக்பாக்கெட் சந்தேகத்தின் பேரில் 293 பெண்கள் கைதாகியுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 22 ஆண்களே கைதாகியுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 14 லட்சம் டாலர்கள் பெறுமதியான பணமும் காசோலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர, பெருமளவு தங்க ஆபரணங்களும் நூற்றுக்கணக்கான மடிக்கணினிகளும் கேமரா, கடிகாரம், கைபேசிகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 466 பிக்பாக்கெட் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 421 பேர் பெண்கள். -BBC
உன்னால் முடியும் பெண்ணே -பெண்ணே !!!!