ஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்ளோ சிரமமா?

beed_water_problem_001மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு ஆபத்தான முறையை கடைபிடித்து வருகின்றனர்.

பீட் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் பல பகுதிகளில் உள்ள ஆழமான கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற தங்கள் குழந்தைகளை கயிறுகளால் கட்டி சிறிய ஜாடியுடன் அனுப்புகின்றனர்.

இவ்வாறு ஆபத்தான முறையில் தண்ணீர் எடுப்பது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஒரு குழந்தை கூறுகையில், இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெற்றோர்கள் எங்களை பள்ளி செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

மேலும், நாங்கள் தண்ணீர் எடுக்க வெகுதொலைவு செல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: