புதுடெல்லி, ஜன.5- காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அமித் ஷாவுடனான சந்திப்பு முன் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பா.ஜ.க. தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா கூறுகையில், “அவசர கதியில் எந்த முடிவையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை.
ஆறு வருடங்களுக்கு நிலையான ஆட்சி தரும் வகையில் கூட்டணியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்கான அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். ஆகவே, இன்று அமித் ஷாவுடன் நடத்தப்படும் ஆலோசனையை தொடர்ந்து, அடுத்த ஒரு சில தினங்களில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு புதிய முதல்வர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-http://www.maalaimalar.com