“நாட்டின் வளர்ச்சிக்கு மதச் சகிப்புத்தன்மை அவசியம்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.
மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த ஒபாமா, சவூதி அரேபியாவுக்குப் புறப்படும் முன்பாக, தில்லியில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். இளைஞர்கள், மாணவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அந்த அரங்கில் ஒபாமா பேசியதாவது:
வேற்றுமையில் ஒற்றுமை: இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
இதைத்தான், “ஒரு தோட்டத்தில் மலர்ந்த அழகான மலர்கள்’ என்று மகாத்மா காந்தி வர்ணித்தார். “இந்தியாவையும், அமெரிக்காவையும், ஒரே மரத்தின் இரண்டு கிளைகள்’ என்று கூறுவேன்.
சமத்துவமற்ற உலகில் நாம் வாழ்ந்தாலும், ஒரு தேநீர் விற்பனையாளர் பிரதமராவதற்கு இந்தியா அனுமதித்தது. சமையல்காரரின் பேரனான என்னை அதிபராவதற்கு அமெரிக்காவும் அனுமதித்தது.
ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்பும் மதத்தைத் தேர்வு செய்யவும், பின்பற்றவும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. எந்தவித அச்சுறுத்தலும், பயமுமின்றி மதத்தை அவர் பின்பற்ற வேண்டும். இதற்கு இரு நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களிலும் இடமுள்ளது.
இதனிடையே, தங்கள் மதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர்கள், சகிப்புத் தன்மையின்றி, வன்முறை, தீவிரவாதம் ஆகிய செயல்களில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பவர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
இயற்கையான நண்பர்கள்: மதச் சுதந்திரம், ஜனநாயக மதிப்பீடுகள், பன்முகத் தன்மை, விளிம்பு நிலையில் இருப்பவர்களும் முன்னேறுவதற்கு வாய்ப்பு அளிப்பது என இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளால், இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே அமைந்த நட்பு நாடுகளாக உள்ளன. மேலும், இந்தியாவின் சிறந்த நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்கும்.
வறுமை ஒழிப்பு: கடந்த சில ஆண்டுகளில், மற்ற நாடுகளைக் காட்டிலும், வறுமையில் இருந்து ஏராளமானோரை இந்தியா மீட்டு அதிரடி சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் வறுமை ஒழிப்புக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டவும், இந்தியா வழிவகுத்துள்ளது.
பெண் சுதந்திரம்: குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நான் வந்தபோது, ஆயுதப்படையைத் தலைமை தாங்கிச் சென்ற பெண், என்னை வரவேற்றார்.
பெண்களின் முன்னேற்றம், வலிமை ஆகியவற்றின் குறியீடாகவே அந்தச் சம்பவம் உள்ளது. இந்தியாவில் அரசியல் உள்பட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது, நாட்டின் வளர்ச்சியில் இளம் பெண்களும் பங்காற்றி வருகின்றனர்.
வெற்றி பெற்ற நாடுகள் அனைத்திலும், பெண்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது அனுபவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்ட விஷயம்.
எனவே, ஒவ்வொரு பெண்ணின் உரிமையையும், சுதந்திரத்தையும், அவருடைய தந்தை அல்லது கணவர் அல்லது சகோதரன் உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் பெண்களிடம் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு உதவி: இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.
இங்கு புல்லட் ரயில் சேவை, நவீன சாலைகள் அமைத்தல், விமான நிலையங்கள், துறைமுகங்களை உருவாக்குதல், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய திட்டங்களுக்கு இந்தியாவுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் ஒபாமா.
ஹிந்தியில் பேசிய ஒபாமா: அரங்கில் பேசத் தொடங்கியதும், “நன்றி’ என்றும், முடிக்கும்போது “ஜெய்ஹிந்த்’ என்றும் ஹிந்தியில் பேசினார் ஒபாமா.
இந்திய நட்சத்திரங்களுக்குப் புகழாரம்: இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, ஹிந்தி நடிகர் ஷாருக்கான், விளையாட்டு வீரர் மில்கா சிங், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார் ஒபாமா.
ஒபாமா பேசிய பிறகு, அவரும் அவரது மனைவி மிச்செலும், பார்வையாளர்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுடன் கை குலுக்கினார்கள்.
-http://www.dinamani.com
மதச் சகிப்புத்தன்மை என்று கூறி இந்திய பிரதமரை நன்றாகவே நக்கல் செய்திருக்கிறீர்கள் !!!
உங்களுடைய இந்த நக்கலுக்கெல்லாம் பயந்து ஹிந்துத்வா கொள்கையாளரான இந்திய பிரதமர் “ராம ஜென்ம பூமி” / “கிருஷ்ண ஜென்ம பூமி” / “காசி” ஆகிய மூன்று இடங்களையும் விட்டு கொடுத்து விடுவாரா என்ன ???
இது ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு இந்திய வம்சாவளி இஸ்லாமியர் மூலம் அமெரிக்கா தெரிவிக்கும் அபாய ஒலி >>உலகம் முழுதும் இவர்களால்தான் கொடூர பிரச்சனைகள் >> பிற மதத்தவரால் அல்ல !!
மலாயாவில் இனிமேல் ஆரிய பார்பனர்கள் மணியாட்ட தடைவிதிக்க வேண்டும் .
தமிழ் அர்சகர்களுக்கு மட்டுமே உள்துறையமச்சு விசா அனுமதி கொடுக்கவேண்டும் ..
தமிழன் ரகீம் > அப்படியே இந்திய முஸ்லிம்கள் மசூதியில் தமிழில்தான் ஓத வேண்டும் > இந்திய கிறிஸ்துவர்கள் தமிழில் தான் பைபிள் வாசிக்க வேண்டும் என்றும் சட்ட மாற்றம் செய்ய அரசாங்கத்திடம் மகஜர் கொடுங்கள் !! புண்ணியமாய் போகிறது !!
தமிழன் ரகீமின் கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால் பாருங்கள் ஐயன் மணியடித்தால்தான் சில தடித்த தோல்களுக்கு பரலோகப் பாதை திறக்குமாம். உள்ளூர் தமிழன் மணியடித்தால் இங்குள்ள தமிழினப் பகைவனுக்கு கோவிலின் பரிசுத்தம் போய்விடுமாம். அரசாங்கம் ஏற்கனவே தடைவிதிக்க முற்பட்டபோது ஒரு தமிழ் அமைச்சன் ( சாமிவேலு அல்ல) சொன்னார், அவாக்கள் பரிசுத்தமானவர்கள், அவாக்களல் மட்டும்தான் பரிசுத்தத்தோடு இருக்க முடியும். லோகல் இந்தியர்களால் பரிசுத்தமாக இருக்க முடியாது. கோவில் பரிசுத்தமான இடம். அங்கே பரிசுத்தம் காக்கப்பட அவாக்களை அரசாங்கம் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்றார் அந்த அமைச்சர். அவர்தான் மாண்புமிகு டத்தோ சுப்ரமணியம். இதைவிட கேவலமாக உள்ளூர் தமிழனை கேவலப்படுத்த ஆரியனால்கூட முடியாது. இந்தச் செய்தி ஆதிகுமணன் அவர்களின் நாளிதழிலேயே பகிரங்கமாக வந்தது. இந்த செய்திக்கு எந்த மரமண்டையும் இந்த நாட்டிலே எதிர்ப்பைக் காட்டவே இல்லை என்பது கூடுதல் செய்தி! வாழ்க உணர்வற்ற அல்லது உணர்வுகள் மழுங்கிப்போன தமிழினம்!
ஒபாமாவுக்கு “உண்மையிலேயே ஒரு நல்ல அரசியல் தலைவர்” என்று அங்கிகாரம் கொடுத்து, இந்தியாவின் பாரத ரத்னா விருதுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். அமெரிக்காவின் நட்புக்கரம் நீளும், இந்தியாவின் சுத்திகரிப்பு தண்ணீர், தடையற்ற மின்சாரம் போன்ற contracts தந்து, உலக தர வசதிகளை இந்தியர்களும் பெறவேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை அவமத்தித ரஷ்யாவை கலட்டி விட வேண்டும்! காரணம் சீனாவை தன் அரசியல் வச படுத்து, ரஷ்யா மறைமுக கரம் நீட்டுகிறது. சீனாவோ பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகளுக்கு , இந்தியாவை மிரட்ட ஆயுதங்கள் தருகிறது. அத்து மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவிகிரது. அதலால் அமெரிக்கர்கள் நமது நண்பர்கள், ஆனால் அவர்கள் கலாச்சாரத்தை அவர்களே வைத்து கொள்ளடும்.