என்னை அறிந்தால் 4 நாளில் இமாலய வசூல்! முழு விவரம்

என்னை அறிந்தால் 4 நாளில் இமாலய வசூல்! முழு விவரம் - Cineulagam

என்னை அறிந்தால் படம் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 2.9 கோடி வசூல் செய்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் இப்படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 40.5 கோடி, கேரளாவில் ரூ 5.9 கோடி, கர்நாடகாவில் ரூ 6.74 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ 1.9 கோடி வசூல் செய்துள்ளது.

இதுவரை இப்படம் இந்தியாவில் மட்டும் 4 நாட்களில் ரூ 52 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் வெளிநாட்டு வசூல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை அறிந்தால் வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் - Cineulagam

என்னை அறிந்தால் படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது வந்த தகவலின் படி முதல் வார இறுதியில் இப்படம் அமெரிக்காவில் 4,80,432 டாலர் வசூல் செய்துள்ளது. இது தான் அமெரிக்காவில் அஜித் படத்தின் பிரமாண்ட ஓப்பனிங் வசூல் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலியாவில் 1,53,680 டாலர் மற்றும் நியூசிலாந்தில் 25,000 டாலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

-http://www.cineulagam.com