உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும்: பிரமோஸ் இயக்குநர் மிஸ்ரா

iiiபெங்களூர்: உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும் என்று பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் சுதிர் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா இணைய தளத்துக்கு சுதிர்குமார் மிஸ்ரா அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிக அதிவேக ஏவுகணை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளில் மிக அதிவேக ஏவுகணையை உருவாக்கிய முதல் நாடு என்ற பெருமையை நாம் பெறுவோம்.

உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும்: பிரமோஸ் இயக்குநர் மிஸ்ரா இதில் நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை ‘ஹைப்பர்சோனிக்’ மிக அதிவேக ஏவுகணையாக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுகோய் போர் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணையைப் பொருத்தும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறைவு செய்துள்ளது.

அடுத்த சுகோய் விமானத்திலும் மற்றொரு ஏவுகணை பொருத்தப்பட உள்ளது. சுகோய் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவும் சோதனை அடுத்த 2 மாதத்தில் நடைபெறக் கூடும். சூப்பர்சோனிக் பிரமோஸ் வகையில் அடுத்த தலைமுறை ஏவுகணைக்கு பிரமோஸ்- என்ஜி பெயரிடப்பட உள்ளது. இந்த செயல்திட்டத்தை நோக்கி நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். நிச்சயம் பிரமோஸ்- என்ஜி ஒருநாள் நனவாகும்.

எதிர்காலத்தில் இத்தகைய பிரமோஸ்- என்ஜி ஏவுகணைகள் ஐந்தை ஒரு சுகோய் போர் விமானத்தில் பொருத்தக் கூடியதாக இருக்கும். உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும்: பிரமோஸ் இயக்குநர் மிஸ்ரா பிரமோஸ் ஏவுகணையின் அடுத்த கட்ட விரிவாக்கத்துக்காக ராஜஸ்தானிலும் ஒரு நிறுவனம் அமைக்கப்பட இருக்கிறது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு பிரமோஸ் ஏரோஸ்பேஸ் இயங்கினாலும் ஹைதராபாத், நாக்பூரில் துணை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் திருவனந்தபுரத்தில் 3வது துணை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ.வும் ரஷ்யாவின் என்.பி.ஓ.எம். நிறுவனமும் இணைந்து உலகத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கியிருக்கிறோம். இருநாட்டு மக்களின் நல்லுறவின் வெற்றியாக பிரமோஸ் ஏவுகணை அமைந்துள்ளது. இவ்வாறு சுதிர்குமார் மிஸ்ரா கூறினார்.

http://tamil.oneindia.com

TAGS: