உ.பி.,யில் தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடாத அரசியல் தலைவர்கள்

mumலக்னோ: உ.பி., மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

நாட்டிலேயே உ.பி., மாநிலத்தில் தான் அதிக அளவில் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் 80 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டு ஒன்றிற்கு ஒரு எம்.பி.,க்கு தலா 5 கோடி ரூபாய் வீதம் தொகுதி வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தலா ரூ.2.5 கோடி என்ற அளவில் மொத்தம் 200 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.

மாநிலத்தில் வாரணாசி தொகுதி எம்.பி., யான பிரதமர் நரேந்திர மோடி,லக்னோ தொகுதி எம்.பி., ராஜ்நாத்சிங், ரேபரேலி தொகுதியில் காங்., தலைவர் சோனியா, அமேதி தொகுதியில் இருந்து ராகுல் , ஆசம்கர் தொகுதியில் இருந்து சமஜ்வாடி கட்சி சார்பில் முலாயம் சிங் யாதவ், கண்ணோஜி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ்வின் மனைவி டிம்பிள் யாதவ் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் யாரும் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதே போன்று மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ம.பி., ஜம்முகாஷ்மீர் மாநிலங்களிலும் தொகுதி வளர்சசிநிதி பயன்படுத்தாமல் உள்ளதாக கூறப்படு்கிறது.

-http://www.dinamalar.com

TAGS: