“முதன்மை இந்தியா” என்பதே எனது மதம் : பிரதமர் மோடி

மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எனது அரசின் ஒரே ஒரு மதம் ‘முதன்மை இந்தியா’ என்பது, எனது ஒரே ஒரு மதப் புத்தகம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், எனது ஒரே ஒரு பிரார்த்தனை அனைவரின் நலம்” என்று கூறினார்.

மேலும், பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை அவசர சட்ட திருத்தத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சம் இருந்தால் அதனை மாற்றி அமைக்க தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: