தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரும் கவிஞர் தாமரையின் கணவருமான தியாகு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. வீட்டை விட்டு ஓடிப் போன என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று கோரி, தியாகுவின் அலுவலகம் உள்ள சூளை மேட்டில் தன் மகனுடன் சாலையில் அமர்ந்து கவிஞர் தாமரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன் வேறொரு செய்தியோடு நின்று கொண்டிருக்கிறேன். ‘சொல்லொண்ணாத் துயரம்” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன் என்று கூறியுள்ளார்.
-http://www.dinamani.com
தமிழுக்கு இந்த கதியா? “தமிழ் இனி மெல்ல சாகும்” என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? என்ன கொடிமையடா இது.மேடைகளில் வீர முழக்கமிட்டு உலகை வலம் வந்த இந்த வீர மங்கைக்கா இந்த கொடுமை? தமிழ் தாயே! மண்ணில் உதிர்வதற்கா நீ செடியில் மலராய் மலர்ந்தாய்? இல்லை.கூடவே கூடாது.நீ கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்தவள்.அமர்ந்து விட்டாயே அமைதியாக.நீ எழு ஞாயிறு போல் எழு.புதிய புற நானூற்று எழுது.