இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘’தமிழக மீனவர்கள் 29 பேர் கடந்த 26-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும், தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது.
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க தாங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
-http://www.pathivu.com
தமிழ் நாட்டுக்கு யார் முதலமைச்சராக வந்தாலும் இந்த வடவனுக்கு மாறி-மாறி கடிதம் எழுதும் கலாசாரத்தை மட்டும் விட்டொழிக்க இவர்களால் முடியவில்லையே! அதனால் எந்தவித பயனும் இல்லை என்று தெரிந்தும் கடமைக்கு அதனை செய்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்களே இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள்.
மடல் எழுதியவர் யார் ??
ஜெ அல்ல ப வா ???
தமிழ் நாடு ஒரு நாடக மேடை .
விதை இல்லா பிண்டங்கள்–ஒரு சுண்டைக்காய் பண்ணும் அநியாயங்களுக்கு பதில் கூற முடியா இவன்களா சீனாவுக்கு பதில் கூற முடியும்? கையால் ஆகா கபோதிகள்.