தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.இச் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை தாக்கி கைது செய்துள்ளனர். அதேபகுதியின் இன்னொரு இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 23 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய அறிவுறுத்துவதுடன், இனியும் இத்தகைய போக்கு தொடர்ந்தால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
அடுத்த மாதம் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனாவை சந்திக்கும் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
-http://www.pathivu.com
இந்திய மீனவர்களிற்கு சிறை!
எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைதீவுகடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 86 பேரில் 85 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. நேற்று மாலை மீனவர்கள் 86 பேரும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
எனினும் இந்திய மீனவர் ஒருவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று வடமராட்சி கிழக்கினில் கைதான மீனவர்கள் பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தகப்பட்டனர் . இவர்களை விசாரித்த நீதிபதி எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீனவரையும் நேரில் சென்று பார்வையிட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களுடைய 5 படகுகளை கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் விற்கக் கூடிய மீன்களை விற்பனை செய்யவும் பழுதடைந்த மீன்களை அழிக்கவும் மன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த மீனவர்கள் நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவார்.
இதேவேளை வடமராட்சி கிழக்கில் கைது செய்யப்பட்ட வேளை முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்தும் 43 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றினில் ஆஜர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-http://www.pathivu.com
இவரு சொல்லிட்டாரு.இவரு சொன்னா வடவன் கேட்டுவிடுவானா? அன்றிலிருந்து இதைத்தானே சொல்லி-சொல்லி அரசியலில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களின் லட்சணத்தை கண்டுதான் வடவனும் அழகாக காயை நகர்த்திக் கொண்டிருக்கிறான்.வடவனுக்கு அடிமைபட்டு கிடக்கும் தமிழ் நாட்டுத் தமிழனே, முதலில் தமிழ் நாடு இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் அந்த தன்மான உணர்வு கொண்ட நாள் எப்பொழுது என்று நீ யோசி.
சாதிப் பெயரைச் சொல்லி ……
அரசியல் செய்யும் …….
மருத்துவரே …..
பாரதியைத் தெரியுமா உமக்கு ?
இந்தியாவில் யார்தான் ஜாதியை சொல்லிவயிர் வளர்க்கவில்லை? பாரதியைபோன்ற முற்போக்குவாதி யாரும் கிடையாது.