பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1041 பேர் பலி…. ஆனாலும் பீதி அடைய வேண்டாம் என்கிறார் அமைச்சர்!

swine-flu-600டெல்லி: பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு நாடு முழுவதும் இதுவரை 1041 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கடந்த இரு தினங்களில் மேலும் 36 பேர் பலியானதையடுத்து கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1041 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,046 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1041 பேர் பலி…. ஆனாலும் பீதி அடைய வேண்டாம் என்கிறார் அமைச்சர்!

(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்… பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)

ராஜஸ்தானில் அதிகம் தற்போதைய நிலவரப்படி, நாட்டிலேயே மிக உயர்ந்த அளவில் ராஜஸ்தானில் 257 பேரும், அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 256 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 151 பேரும் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் 131 பேரும், தெலுங்கானாவில் 56 பேரும், கர்நாடக மற்றும் பஞ்சாப்பில் தலா 42 பேரும், ஹரியானாவில் 21 பேரும் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் 9 பேர்

ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும், டெல்லியில் 10 பேரும், தமிழகத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக, லோக்சபாவில் விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா கூறுகையில், பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்றார்.

நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.com

TAGS: