நாடு முழுவதும் பூரண மது விலக்கு: குமரி அனந்தன்

  • ஏவிபிவி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் பேசுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன். உடன் காவேரிப்பாக்கம் லெட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயத்தின் சம்பத்குமார் ஜீயர்.

    ஏவிபிவி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் பேசுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன். உடன் காவேரிப்பாக்கம் லெட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயத்தின் சம்பத்குமார் ஜீயர்.

குஜராத்தில் உள்ளதைப் போன்று பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏவிபிவி) சார்பில், “மதுவில்லா தமிழகம்’ உருவாக வேண்டி, மாணவர்களின் மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குமரி அனந்தன் பேசியதாவது:

இப்போதைய புள்ளி விவரங்களின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 40 சதவீதம் பேர் குடிப்பதாவும், பெண்களில் 13 சதவீதம் பேர் குடிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆண்ட காலங்களிலும், ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆட்சி காலங்களிலும் தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை. அதற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மதுவிலக்கை நீக்கி மதுவை கொண்டுவந்தனர். மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விற்பனை என்பது தற்போது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டதாக இருக்கிறது.

தற்போது அவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மதுவை கொண்டுவர மசோதா நிறைவேற்ற வேண்டும். பின்னர் நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த மோடி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார்.

-http://www.dinamani.com

TAGS: