இந்தியாவின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை திட்டத்தில் இலங்கைக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 19சதவீதத்தினால் அதி கரிக்கப்பட்டுள்ளது எனவும் , வெளி விவகார அமைச்சின் ஊடாக, வெளிநாடுகளில் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்ழைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு 9107 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பூட்டானுக்கு, 6160.20 கோடி ரூபாவும், ஆப்கானிஸ்தானுக்கு, 676 கோடி ரூபாவும், இலங்கைக்கு 500 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு 183 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
-http://www.pathivu.com
நன்றி இந்தியா.இதுபோன்று என்றும் எங்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டுகிறோம்.அது யாருடைய பணமாக இருந்தால் என்ன ? பல லட்ச புலிகளை கொல்ல துணை நின்ற வட இந்திய மக்களுக்கு நன்றி நன்றி நன்றி.
இத்தகைய சின்கேக்களின் நம்மை புண்படுத்தும் சொற்கள் தமிழன் ஒன்றுபடவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.