மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 1995ஆம் ஆண்டு சிவசேனா- பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது 20 ஆண்டுகாலம் கழித்து இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அந்நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தடைக்கு மாட்டிறைச்சி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தடையால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com
இந்தியாவில் பெண்களாக இருப்பதை விட, பசு மாடாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் போல! இந்தியாவில் 50 கோடிக்கு மேல் மக்கள் உணவுக்கு கஷ்ட படுகிறார்கள் அதற்க்கு ஒரு வழியை கண்டு பிடிகிரத்தை விட்டுவிட்டு…..மலேசியா துபாய் இன்னும் பல இஸ்லாமிய நாடுகளில் பன்றி இரட்சியை பொது இடங்களில் விற்பதற்கு அனுமதி உண்டு, பல முக தன்மை கொண்ட இந்தியாவில் கேள்வி குறியாக உள்ளது. இந்தியாவில் அதிகமாக மாட்டு இரட்சி உண்ணுபவர்கள் கிருஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் ஏன் இந்துக்கள் கூட உண்ணுகிறார்கள், வால்மிகியிளையும், மகபரததிலும் மாடு உண்ணும் இந்து கதா பாத்திரம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்து நாடான நேபாளில் வருடா வருடம் கடவுளுக்கு மாடு பலி கொடுக்க படுகிறது.