பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டம்: பாதுகாப்பு அளித்த மாணவர்கள்

hollyசிறுபான்மையினருடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹிந்துக் கோயிலில் நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு அந்நாட்டு மாணவர் அமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர்.

கராச்சியில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோலிப் பண்டிகைக்கு பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஃபவ்வத் ஹசன் கூறியதாவது:

ஷியா முஸ்லிம்களின் சடங்குகள் நடைபெறும் மண்டபமான இமாம்பர்காவில் அந்தப் பிரிவினருடன் நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதைப் போல் பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஹிந்துக்களுக்கும் அதே மரியாதையைக் கொடுக்க விரும்புகிறோம். அவர்கள் பல பிரச்னைகளால் அடக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர்.

ஹிந்துக் கோயில்களை இடிப்பது, சிறுமிகளை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது மற்றும் கலாசாரத்தை ஒடுக்குவது போன்றவை நடந்து வருகின்றன. இவற்றைக் கருதியே ஹிந்துக்களைப் பாதுகாக்கவும், அவர்களுடன் ஒற்றுமையை நிலைநாட்டவும் நாங்கள் முன்வந்தோம்.

எங்கள் சமூகம் ஒட்டுமொத்தமாக மாற வேண்டியுள்ளது. சிலரின் உரிமைக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லையென்றால், நாளை நீங்களும் குறிவைக்கப்படலாம். அப்போது உங்களின் உரிமைக்கு யாரும் பாடுபடமாட்டார்கள் என்று அவர் கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: