நமது வாழ்க்கை முறை தவறாகப் போயிருப்பதற்கு கெஜ்ரிவாலின் உடல்நிலைதான் நல்ல உதாரணம்

kejriwal4511

பெங்களூர்: நமது தவறான, படபடப்பான வாழ்க்கை முறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே மிகச் சிறந்த உதாரணம் என்று பெங்களூரைச் சேர்ந்த ஜிந்தால் இயற்கை மருத்துவக் கழகத்தின் முது நிலை மருத்துவர் டாக்டர் பபீனா நந்தகுமார் கூறியுள்ளார்.

தற்போது கெஜ்ரிவாலின் உடலிலிருந்து பெருமளவிலான நச்சுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கெஜ்ரிவால் தற்போது ஜிந்தால் மருத்துவக் கழகத்தில்தான் இயற்கை சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து டாக்டர் பபீனா நந்தகுமார் கூறுகையில், முதல் நாள் மருத்துவப் பரிசோதனையின்போது, அவரது உடலில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சர்க்கரை இருந்தது தெரிய வந்தது. மேலும் அவருக்கு தொடர் இருமலும் இருந்து வந்தது. வழக்கமாக தண்ணீர் சிகிச்சை, மசாஜ், பேக்ஸ், களிமண் தெரப்பி ஆகியவற்றையும், யோகாவையும், டயட் தெரப்பியையும் இணைத்து சிகிச்சை அளிப்போம்.

ஆனால் கெஜ்ரிவால் விஷயத்தில் வேறு மாதிரியாக செய்ய வேண்டியிருந்தது. நமது வாழ்க்கை முறை தவறாகப் போயிருப்பதற்கு கெஜ்ரிவாலின் உடல்நிலைதான் நல்ல உதாரணம். சரியான நேரத்தில், சரியான சாப்பாடை சாப்பிடாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசு, அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் குளிர்பானங்கள் என நமது உடம்பை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.

தற்போது கெஜ்ரிவாலுக்கு நேச்சுரோபதியுயுடன், யோகா தெரப்பி, டயட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு வருகின்றன. அவரது உடலிலிருந்து பெருமளவிலான நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல் முழுவதும் புத்துணர்ச்சியூட்டப்பட்டுள்ளது. அவரது சர்க்கரை அளவும் தற்போது 30 சதவீதம் குறைந்து விட்டது என்றார் டாகட்ர் பபீனா.

கெஜ்ரிவாலும், அவரது பெற்றோரும் ஜிந்தால் கழகத்தில், மார்ச் 5ம் தேதி வந்து அட்மிட் ஆகினர். அவர்களுக்கு 10 நாள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 பேரும் மார்ச் 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். கெஜ்ரிவாலின் தந்தைக்கு மலச் சிக்கல் பிரச்சினையும், தாயாருக்கு சர்க்கரை வியாதி, மூட்டு வலி பிரச்சினையும் உள்ளது.

http://tamil.oneindia.com

TAGS: