சிறிலங்கா இந்திய கடல் எல்லையை மீனவர்களால் அறிந்துக் கொள்ளும் வகையிலான அடையாளப்படுத்தல் கருவிகளை எப்போது பொருத்துவீர்கள் என்று, சென்னை உயர் நீதிமன்றம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
இது தொடர்பான மனு ஒன்றை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.ஞானேஸ்வரன் தாக்கல் செய்திருந்தார்.
400க்கும் அதிகமானவர்கள் எல்லைத்தாண்டி சென்றமையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் இந்திய கடல் எல்லையை அறிந்து கொள்வதற்கு வசதியான வகையில் அடையாளப்படுத்தும் கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த மத்திய அரசாங்கம், கடல் எல்லையை அடையாளப்படுத்துவதற்கான குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதனை அடுத்து விரைவில் இந்த கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்தது.
-http://www.pathivu.com