பீகாரில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிச்சைக்காரர்கள் இணைந்து புதிதாக வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர்.
பீகாரின் கயா நகரில் புகழ்பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது, இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர்.
இதனால் இந்த கோவில் பிச்சையெடுப்பதற்கு என்றே கூட்டம் அலை மோதும்.
இந்நிலையில் பிச்சை எடுக்கும் சுமார் 60 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
அந்த கூட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்கி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் மங்களா வங்கி என்ற பெயரில் பிச்சைக்காரர்களுக்கென்று தனி வங்கி தொடங்கப்பட்டது.
இந்த வங்கியின் மானேஜராக ராஜ்குமார் மஞ்ச்கி என்ற நபரும், கேஷியராக இவரது மனைவி தேவியும் பதவி வகிக்கின்றனர்.
ஒருவாரம் முழுவதும் எடுக்கும் பிச்சையில் சாப்பிட்டது போக மிச்ச பணத்தை செவ்வாய்தோறும் வங்கியில் கட்டி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவசர தேவைகளுக்காக கடன் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-http://www.newindianews.com