பார்த்திபனால் பாதியில் நிற்கும் விஜய் சேதுபதி படம்

பார்த்திபனால் பாதியில் நிற்கும் விஜய் சேதுபதி படம் - Cineulagam

நடிகர் பார்த்திபன் தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி , நயன்தாரா இணைந்து நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்புக்கு வரவில்லை. பார்த்திபன் தரப்பில் சரியான காரணம் வரவில்லையாம்.

இதனிடைய நயன்தாரா கால்ஷீட்டும் பார்த்திபனால் வீண் போக படப்பிடிப்பு நடக்காமலே தள்ளி போகிறது.

-http://www.cineulagam.com