பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா

rajnath_singh_001இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறைசெய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீரில் புதியநகரியம் அமைக்கும் முயற்சி எதுவும் முன்னெடுக்கப்பட்டால் அது, ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தை மீறுவதாக அமையும்.

மேலும் காஷ்மீர் மக்கள் அதுபோன்றநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , “பாகிஸ்தான் தங்களை பற்றி கவலை கொள்ள வேண்டும்.

மாறாக இந்தியாவின் உள்விவகாரங்களில் அது தலையிடக்கூடாது என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட நாங்கள் எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: