அனைத்து கோவில்களிலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்து முன்னணி வலியுறுத்தல்

20hindusஇந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோவில் வருமானம் வரும் கோவிலை மட்டுமே இந்து அறநிலையத்துறை கவனிக்கிறது. வருமானம் வரும் கோவில்களிலும் பக்தர்களை கசக்கிப் பிழிந்து கல்லா கட்டும் கேவலம் அரங்கேறுகிறது. அதிலும் கோவில்களில் தரிசனம் கட்டணம் என இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பாகுபாடு படுத்துவது கேவலத்திலும் கேவலமானது. ஆலய தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தொடக்ககாலம் முதலே வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வருமானம் அதிகமுள்ள 234 கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசிற்கு இந்து அறநிலையத்துறை பரிந்துரைத்திருப்பது பாராட்டத்தக்கது. தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், அனைத்து ஆலயங்களிலும் இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமமாக நடத்திடவும், அனைவரும் கௌரவத்துடன் இறைவனை தரிசிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசிற்கு இந்து முன்னணி பாராட்டுத் தெரிவித்துக்கொள்வதோடு, முழுமையாக அனைத்து தரிசன கட்டணங்களையும் அனைத்து கோவில்களிலும் ரத்து செய்யவும் வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: