இந்தியச் செய்தி இலங்கையை வைத்து காரியம் சாதிக்க முயலும் சீனா: அதிநவீன ஏவுகணையை சோதனை செய்த இந்திய ராணுவம்!

brahmos_missile_001இந்திய ராணுவம் இன்று பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

மலாக்கா ஜலசந்திப் பகுதியில் இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்வமாக உள்ள நிலையில், கார் நிகோபர் தீவு பகுதியில் இன்று மதியம் 1.10 மணியளவில் இந்த சோதனை நடந்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், சோதனை வெற்றிகரமாக இருந்ததாகவும், இலக்கை மிகத் துல்லியமாக பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையின்போது ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இந்த சோதனை குறித்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சுதிர் மிஸ்ரா கூறுகையில், நமது ஏவுகணைத் திறனை மீண்டும் நி்ரூபிப்பதாக இந்த சோதனை அமைந்துள்ளது. எதிரிகளின் இலக்கை மிகத் துல்லியமாக தாக்க கூடிய வகையில் பிரம்மோஸ் ஏவுகணை அமைந்துள்ளது.

மேலும், இந்த வெற்றிகரமான சோதனைக்காக ராணுவத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வு மற்றும் கல்விக் கழகத்தின் ஆய்வு உதவியாளர் அவினாஷ் கோட்பலே இதுகுறித்து கூறுகையில், இலங்கையை வைத்து இந்தியாவுக்கு எதிராக காரியம் சாதிக்க சீனா முயல்கிறது. எனவே பிரம்மோஸ் சோதனையின் வெற்றியானது முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: