சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி ஏற்கனவே படங்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பான மற்றொரு படம் ‘இலக்கு’ என்ற பெயரில் உருவாகிறது. இதை தயாரித்து இயக்கும் மதுசூதன ரெட்டி கூறியது:
கடந்த 2004ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டான். அப்போது போலீஸ் அதிகாரி விஜயகுமார் அதுபற்றி பேசினார். அந்த பேச்சுதான் இக்கதையை உருவாக்க உதவியது.
இது வீரப்பனின் வாழ்க்கை பற்றிய கதை அல்ல அவனை பிடிக்க போலீசார் கடந்த 20 வருடமாக எப்படியெல்லாம் முயற்சி செய்தார்கள். இந்த போராட்டத்தில் எவ்வளவு போலீசார் இறந்தார்கள் என்பதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகிறது.
போலீஸ் அதிகாரி வேடத்தில் நானே நடிக்கிறேன். வீரப்பனாக ஸ்ரில் நடிக்கிறார். தாமஸ், தேவி, கனி, ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை எஸ்.ஏ.ராஜ்குமார். ராமநாத் ஒளிப்பதிவு. இதன் படப்பிடிப்பு முடிந்து இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது.
-http://cinema.dinakaran.com